தீபாவளியில் சூர்யாவுடன் போட்டி போடும் சசிகுமாரின் திரைப்படம்.!!

Photo of author

By Vijay

தீபாவளியில் சூர்யாவுடன் போட்டி போடும் சசிகுமாரின் திரைப்படம்.!!

Vijay

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக உள்ள சசிகுமாரின் திரைப்படம் சூர்யாவுக்கு போட்டியாக களமிறங்க உள்ளது.

சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். இதனை அடுத்து இவர் நிறைய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

தற்போது நடிகர் சசிகுமார் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் எம்ஜிஆர் மகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிகை மிர்நாளினி ரவி நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தை நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி எம்ஜிஆர் மகன் திரைப்படம் வருகின்ற நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

மேலும், அதே நாளில் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படமும் தீபாவளி பண்டிகையையொட்டி ஓடிடியில் வெளியாக உள்ளதால் இந்த இரு படங்களுக்கும் இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது.