வன்னியர்களை சீண்டிய ஜெய் பீம் திரைப்படம்.! சர்ச்சைக் காட்சிகள்.!!

0
181

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் ரஜிஷா விஜயன், லிஜி மோல் பிரகாஷ்ராஜ், மணிகண்டன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் படம் பழங்குடி இன மக்களின் வாழ்க்கையையும், அவர்கள் மீது பழிசுமத்தப்படும் போலி வழக்குகளின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது, இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக காட்டப்படும் ஒருவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால், தற்போது அந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

 

Previous articleகட்டுபாட்டை இழந்த லாரி! பரிதாபமாக பலியான 6 உயிர்கள்!
Next articleஅக்டோபர் மாதத்தில் மட்டும் இவ்வளவு லட்சம் கோடி வருவாய்! மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!