ரஜினியின் 3 நாள் சாதனையை ஒரே நாளில் முறியடித்த சூர்யாவின் ஜெய்பீம்.!!

0
81

.நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் டீஸர் நேற்று சமூகவலைதளங்களில் வெளியாகியது.

நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் தலைப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தலைப்பு வைரலாகிய நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ஜெய் பீம் திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இந்த படத்திற்கு ஏ சான்றிதழை வழங்கியுள்ளனர். மேலும்,  இந்த படம் நவம்பர் 2ம் தேதி அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் டீசர் நேற்று மாலை சமூகவலைதளங்களில் வெளியாகியது. ஜெய் பீம் திரைப்படம் ஜாதி மற்றும் அரசியலை முக்கியக் கருத்தாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஜெய்பீம் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 14ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி இதுவரை 63 இலட்சம் பேர் மட்டுமே பார்த்துள்ளனர். ஆனால் நேற்று வெளியான ஜெய்பீம் திரைப்படத்தின் டீசரை இதுவரை 81 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதனால் ரஜினியின் மவுசு குறைந்து விட்டதா என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.