முயல் வேட்டையில் ஈடுபட்ட மூவருக்கு சிறை தண்டனை!

Photo of author

By Parthipan K

முயல் வேட்டையில் ஈடுபட்ட மூவருக்கு சிறை தண்டனை!

சென்னம்பட்டி வனசக்கரத்துக்கு உட்பட்ட குறும்பனூர் தெற்கு பீட்டில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு முயல் வேட்டையாட சிலர் முயற்சித்து வருவதாக சென்னம்பட்டி வனச்சக்கர அலுவலரான செங்கோட்டையனுக்கு சிறிய குறுந்தகவல் கிடைத்தது. இதன் பேரில் வனத்துறையினர் அங்கு சென்றார்கள்.

அங்க முள் புதரில் மூணு பேர் நெற்றியில் விளக்கு கட்டிகொண்டும், பெரிய அளவிலான தடியை வைத்துக் கொண்டும் அம்முயலை வேட்டையாட அமைதியாக காத்திருந்தார்கள். வனத்துறையினர் சாதுவாக நகர்ந்து சென்று வேட்டையாடிக் கொண்டிருந்த மூவரையும் பிடித்தனர். அம்மூன்று பேரையும் விசாரித்த போது அவர்கள் சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவில் உள்ள கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

மேலும் பரத் இவருடைய வயது 24, அறிவுமணி வயது 26 மற்றும் ஜான்பால் வயது 25 ஆகியோர் என்பதும், விசாரணையில் அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்து முயலை வேட்டையாட வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மூணு பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த மூணு பேருக்கும் தலா ரூ 20,000 என  60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. மேலும் இதுபோன்று வனப்பகுதிகளில் விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க கண்காணிப்பில் வனத்துறையினர் தீவிரபடுத்தப்படுகிறார்கள்.