ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றி!!! ரஜினிகாந்த் அவர்களுக்கு புதிய பி.எம்.டபிள்யூ பரிசளித்த கலாநிதி மாறன்!!! 

Photo of author

By Sakthi

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றி!!! ரஜினிகாந்த் அவர்களுக்கு புதிய பி.எம்.டபிள்யூ பரிசளித்த கலாநிதி மாறன்!!!

ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு புதிய பிஎம்டபிள்யூ காரை பரிசாக அளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி கடந்த மாதம் 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர்கள் சிவராஜ்குமார், மோகன்லால், ஜேக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், யூடியூப் பிரபலம் ரித்விக், வசந்த் ரவி, சுனில், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். மேலும் சன்பிக்சர்ஸ் நிறும் சார்பில் கலாநிதி மாறன் அவர்கள் ஜெயிலர் திரைப்படத்தை தயாரித்திருந்தார். எதிர்பார்த்த அளவிற்கும் மேல் ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

தற்பொழுது வரை ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் 525 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள நிலையில் 600 கோடி ரூபாய் வசூலை நோக்கி திரைப்படம் சென்று கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் மட்டும் ஜெயிலர் திரைப்படம் கிட்டதட்ட 175 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்காக நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் புதிய பி.எம்.டபிள்யூ காரை பரிசாக கொடுத்துள்ளார். கலாநிதி மாறன் அவர்கள் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு அளித்த புதிய பி.எம்.டபிள்யூ எக்ஸ் 7 காரின் விலை 1.24 கோடி ரூபாய் ஆகும். தற்பொழுது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

இதற்கு முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு காசோலை ஒன்றை கொடுத்தார். அது தொடர்பான புகைப்படமும் இணையத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது.