1000 ரூபாய் மகளிர் உதவித் தொகை திட்டம்!!! செப்டம்பர் 5ம் தேதிக்குள் இறுதிப் பட்டியல் தயாராகிவிடும் !!

0
68

1000 ரூபாய் மகளிர் உதவித் தொகை திட்டம்!!! செப்டம்பர் 5ம் தேதிக்குள் இறுதிப் பட்டியல் தயாராகிவிடும்…

மகளிருக்கான 1000 ரூபாய் உரிமைத் தொகை பெறுவோர்களுக்கு தகுதியானவர்களின் இறுதி பட்டியல் செப்டம்பர் மாதம் 5ம் தேதிக்குள் தயாராகி விடும் என்று தகவல் கிடைத்துள்ளது.

திமுக தலைமையிலான தமிழக அரசு பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற திட்டத்தை அறிவித்திருந்தது. மகளிருக்கான உரிமைத் தொகைத்திட்டம் இந்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் 15ம் தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளது.

இந்த மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்காக குடும்பத் தலைவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தரவுகள் அனைத்தும் கம்பியூட்டரில் பதிவேற்றப்பட்டது. மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு மொத்தமாக 1 கோடியே 64 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த விண்ணப்பங்கள் தற்பொழுது அரசால் பரீசிலிக்கப்பட்டு வருகின்றது. அதன் பின்னர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து உள்ள பெண்களின் வீடுகளுக்கு சென்று கள ஆய்வு பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இந்த கள ஆய்வு பணிகள் இன்னும் 2 தினங்களில் முடிவடையவுள்ளது.

இதுவரை சேகரிக்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தமிழக அரசின் தரவுகளோடு ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வருகின்றது. இந்த பணிகள் அனைத்தும் வருகிற 5ம் தேதிக்குள் முடித்து தகுதியானவர்களின் பட்டியலை தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்த வேலைகள் அனைத்தும் முடிந்த பிறகு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற தகவல்கள் அவர்கள் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படவுள்ளது. இதில் நிராகரிப்பு செய்யப்படும் விண்ணப்பங்களை மேல் முறையீடு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆர்.டி.ஓ அதிகாரி அல்லது சப் கலெக்டரிடம் முறையிட்டு தீர்வு காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.