ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில்? நெல்சன் அதிரடி!

0
132

ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில்? நெல்சன் அதிரடி!

தமிழ் திரையுலகில் டாப் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் நெல்சன் திலீப்குமார்.இவர் தமிழில் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கினார்.இவர் இயக்கிய இந்த இரு படங்களும் செம்ம ஹிட் கொடுத்தது.இதையடுத்து மாஸ் ஹீரோவான தளபதி விஜய் அவர்களை வைத்து ‘பீஸ்ட்’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் வணீக ரீதியாக வெற்றி பெற்றாலும் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தன.இந்த மூன்று படங்களுக்கும் அனிருத் இசையமைப்பாளர் ஆவார்.
இதனை தொடர்ந்து நெல்சன் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஜெயிலர் படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது.பீஸ்ட் படம் நெல்சனுக்கு கைகொடுக்காமல் போனதால் ஜெயிலர் படத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு நெல்சன் தள்ளப்பட்டார்.கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.இப்படம் ரஜினி மற்றும் இயக்குநர் நெல்சனுக்கு நல்ல காம்பேக் கொடுத்துள்ளது என்று அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.மேலும் படத்தின் பாடல்கள் அனைத்தும் தாறுமாறாக உள்ளது என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.படம் வெளியாகிய ஒரே வாரத்தில் சுமார் 400 கோடி வரை வசூலை குவித்து இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்து விட்டது.

இந்நிலையில் ஜெயிலர் வெற்றிக்கு பிறகு பல்வேறு நிகழிச்சிகளில் பங்கேற்று நெல்சன் பேட்டி அளித்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ஜெயிலர் 2 பாகம் இயக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.மேலும் அவர் இயக்கிய மற்ற படங்களான கோலமாவு கோகிலா,டாக்டர் உள்ளிட்ட படங்களின் 2 பாகம் எடுக்க திட்டம் இருக்கின்றது என்று கூறிய அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி,தளபதி விஜய் ஆகிய இருவரையும் வைத்து படம் பண்ணுவதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று கொண்டிருக்கின்றது என்று கூறினார்.

Previous articleஜார்கண்ட் கவர்னரை நேரில் சந்தித்த சூப்பர்ஸ்டார்… மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடந்ததாக தகவல்!!
Next articleவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி… தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!!