வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி… தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!!

0
33

 

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி… தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

 

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்கள் வெளியிட்டு உள்ளது.

 

தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும்(ஆகஸ்ட் 17), நாளையும்(ஆகஸ்ட்18) மிதமாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது என்று ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

இதையடுத்து வங்கக் கடல் பகுதியிலும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் நாளை அதாவது ஆகஸ்ட் 18 வெள்ளிக்கிழமை அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

 

அவ்வாறு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை(ஆகஸ்ட்18) உருவானால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.