இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் களமிறங்கியது. ஆனால் இதுவரை நடந்த 4 போட்டியில் ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளில் வென்றுள்ளது ஒரு போட்டியை சமன் செய்துள்ளது. இந்திய அணி இந்த 4 வது போட்டியின் தோல்வியினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. மேலும் இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதம் உள்ளது. இறுதி போட்டிக்கு முன்னேற இலங்கை அணி ஆஸ்திரேலியா அணியை வெல்ல வேண்டும் என்ற நிலையில் உள்ளது இந்திய அணி.
இதில் 4 வது போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்து வந்த நிலையில் ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்த போது கொன்ஸ்டாஸ் பக்கத்தில் பீல்டிங் செய்தார். அப்போது அவரை திசை திருப்பும் வகையில் பேசிக்கொண்டே இருந்தார். அதற்கு அவர் உனக்கு என்ன பிரச்சனை என்ன வேண்டும் உன் வேலையை செய் என்று கோபமாக கூறினார் ஜெய்ஸ்வால். பின் அடுத்து லயன் வீசிய பந்தை கொன்ஸ்டாஸ் மீது அடித்தார். அந்த பந்து அவரின் இடுப்பை பதம் பார்த்தது. இதனால் ரசிகர்கள் பலரும் இது தான் வாயை கொடுத்து வாங்கி கொள்வது என்று பதிவிட்டு வருகின்றனர்.