இனிமே என் டைம் ஸ்டார்ட்..பட்டாசு பேட்டிங்!! பதிலடி கொடுக்கும் ஜெய்ஸ்வால்!!

0
149
Jaiswal retaliates
Jaiswal retaliates

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் விளையாடி வரும் போட்டியில் ஜெய்ஸ்வால் அரைசதம்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் தொடரில் நான்காவது போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தற்போது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.முதல்  இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் விளாசி ரன் குவித்தது. இதில் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசினார்.

இரண்டாவதாக களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர் ரோகித் சர்மா 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய கே எல் ராகுல் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்கத்தில் களமிறங்கிய ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவர் முதல் போட்டியில் அடித்த 161 ரன் குறிப்பிடத்தக்கது.

இந்த முதல் போட்டிக்கு பின் அவர் எந்த போட்டியிலும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்தார். முதல் போட்டியில் ஸ்டார்க் பந்து வீசுவதை உங்கள் பந்து மெதுவாக வருகிறது என கூறியதும் அதன் பின் அவர் பந்து வீச்சில் விக்கெட் இழந்து வந்தார். ஆனால் நடைபெற்று வரும் நான்காவது போட்டியில் அபாரமாக விளையாடி அரைசதம் விளாசினார். தற்போது 61 ரன்களில் விளையாடி வருகிறார். இந்திய அணி தற்போது 118 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது. விராட் கோலி 22 ரன்களில் விளையாடி வருகிறார்.

Previous articleதிமுக அரசை கண்டித்து!! 6 முறை சாட்டையால் அடித்து அண்ணாமலை போராட்டம்!! 
Next articleகே எல் ராகுலுக்கு நடந்து வரும் அநீதி..வேண்டுமென்றே செய்கிறார்கள்!! இடம் பிடிக்க போராடும் ராகுல்!!