கோவில் இருந்த இடத்தில் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த உத்தரபிரதேசத்தில் இருக்கக்கூடிய சம்பல் ஜாமா மசூதியின் பெயர் ஜூம்மா மசூதி என தொல்லியல் துறையால் பெயர் பலகை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நவம்பர் 24ஆம் தேதி ஜாமா மசூதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக தொல்லியல் துறையினர் சென்றபோது கலவரம் ஏற்பட்டு அதில் 4 பேர் பலியான நிலையில் ஆய்வு மேற்கொள்வதை தொல்லியல் துறை உடனடியாக நிறுத்திவிட்டது. அப்பொழுது இந்த மசூதியின் பெயர் பழகியானது மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே மசூதியின் உட்பகுதியில் பெயர் பலகை மாற்றப்பட்டு இருப்பதாகவும் வெளியிலும் நீல நிறத்தில் ஜும்மா மசூதி என்ற பெயர் பலகை வைக்கப்பட்ட நிலையில் வேண்டாத மர்ம நபர்கள் யாரோ பெயர் பலகையை மாற்றி வைத்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜாமா மசூதி என குறிப்பிடப்பட வேண்டிய இடத்தில் ஜும்மா மசூதி என குறிப்பிட்டு இருப்பது இஸ்லாமியர்கள் இடையேயும் சம்பல் பகுதியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொல்லியல் துறை இதற்கான பெயர் பலகை காவல்துறையிடம் மற்றொன்று பாதுகாப்பாக இருப்பதாகவும் இதற்கான பெயர் பலகை பிரச்சனை தீர்வு செய்யப்பட்டு புதிய பெயர் பலகைகள் மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய பெயர் பலகை எப்பொழுது மாற்றப்படும் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.