அவதார் படத்தை 3 பாகங்களோடு முடித்துக் கொள்கிறாரா ஜேம்ஸ் கேமரூன்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Photo of author

By Vinoth

அவதார் படத்தை 3 பாகங்களோடு முடித்துக் கொள்கிறாரா ஜேம்ஸ் கேமரூன்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கடந்த 2009ம் ஆண்டு ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 24 கோடி ரூபாய் அமெரிக்க டாலர் செலவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியாகி 285 கோடி அமெரிக்க டாலர் வசூலித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் அவதார். கடந்த 2011ம் ஆண்டு அவதார் 2 படத்தை ஐந்து பாகங்களாக எடுக்கப்போவதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார். அதையடுத்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக இந்த படங்கள் உருவாக்கத்தில் உள்ளன.

அதன்படி, அவதார்-2 2022 டிசம்பர் 16 அன்றும், அவதார்-3 2024 டிசம்பர் 20 அன்றும், அவதார்-4 2026 டிசம்பர் 18 அன்றும், அவதார்-5 2028 டிசம்பர் 22 அன்று வெளியிட உள்ளதாக படக்குழுவினர் முன்னரே அறிவித்திருந்தனர். சாமியபதியில் பாடத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

இப்போது அவதார் 2 படம் ரிலீஸூக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தை மூன்று பாகங்களோடு முடித்துக் கொள்ளலாம் என நினைப்பதாக ஜேம்ஸ் கேமரூன் சமீபத்தில் அளித்த நேர்காணலில் கூறியுள்ளார். மேலும் அவர் “படத்தின் வசூலைப் பொறுத்தே ஐந்து பாகங்கள் ரிலீஸ் ஆவது முடிவெடுக்கப்படும்” என அவர் கூறியுள்ளார்.

கேமரூனின் இந்த முடிவு உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சமீபத்தில் இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியாகி உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.