3 மாவட்டங்களில் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு

Photo of author

By Parthipan K

3 மாவட்டங்களில் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடரும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்த மாவட்டங்கள் வரும் 31 ஆம் தேதி வரை முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து உள்ளனர். தற்போது இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 68 வயதுடைய முதியவர் கொரோனா பாதிப்பிற்கு பலியாகி உள்ளார் என்ற தகவல் குஜராத் அரசு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் மட்டும் இன்று ஒரே நாளில் கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் கொரோனா பாதித்துள்ள 75 மாவட்டங்களில் செயல்பாடுகளை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர மற்றவற்றை மேற்கொள்ளக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை ,காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.