பிரியங்கா காந்தியை இரவு விருந்துக்கு அழைத்துள்ள பா,ஜனதா எம்.பி.

Photo of author

By Parthipan K

பிரியங்கா காந்தி தங்கியிருந்த அரசு இல்லம், அவருக்குப்பின் பா.ஜனதா தேசிய ஊடகப்பிரிவு தலைவரும், எம்.பி.யுமான அனில் பலூனிக்கு மத்திய வீட்டுவசதித்துறை ஒதுக்கியது.
இந்நிலையில் தான் தங்கியிருந்த வீட்டுக்கு புதிதாக குடியேற இருக்கும் பா.ஜனதா எம்.பி. அனில் பலூனிக்கு தேநீர் விருந்தளிக்க பிரியங்கா காந்தி கடிதம் மூலம் அழைப்பு விடுத்து உள்ளார். அவரின் அலுவலகத்துக்கும் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு பதில் அளித்து பிரியங்கா காந்திக்கு கடிதம் அனுப்பி உள்ள  எம்.பி “புற்றுநோய்க்கான சிகிச்சை முடிந்து நான் வீடு திரும்பி உள்ளேன் இப்போது, மருத்துவர்கள் என்னை வீட்டில் ஓய்வெடுக்கும் படி கேட்டு கொண்டுள்ளனர். லோதி பங்களாவிற்குள் நுழைந்தவுடன், இரவு விருந்துக்கு அழைப்பு விடுப்பதாக கூறி உள்ளார்.