ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

0
127

ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

சீனாவில் உருவான உயிர் கொல்லியான கொரோனா வைரஸ் தோற்று இன்று உலகையே முடக்கிப் போட்டு இருக்கிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது

இந்த வைரஸ் நோயை தடுக்கும் வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மக்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு. காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வீட்டிலேயே இருக்கும்படி ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார்.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணி வரை நீடிக்கும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்தியாவசிய பணிகள் தொடர எந்த தடையும் இல்லை என்றும் இந்த ஊரடங்குக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பொது மக்களின் நலம் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Previous articleதமிழகத்தின் மூன்று மாவட்டங்கள் முடக்கப்படும் : மத்திய அரசு அதிரடி உத்தரவு!
Next articleபிரபல நடிகர் மற்றும் இயக்குனரான விசு மரணம்! அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்