1000 கோடியை நெருங்கும் ஜவான் திரைப்படம்!!! 16வது நாள் வசூல் எவ்வளவு என்று தெரியுமா!!?

0
58
#image_title

1000 கோடியை நெருங்கும் ஜவான் திரைப்படம்!!! 16வது நாள் வசூல் எவ்வளவு என்று தெரியுமா!!?

நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியான ஜவான் திரைப்படத்தின் 16வது நாள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி இருக்கின்றது.

நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படத்தை இயக்குநர் அட்லி இயக்கியுள்ளார். ஜவான் திரைப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி, தீபிகா படுகோன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஜவான் திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார். ஜவான் திரைப்படம் கடந்த செப்டம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக உலக அளவில் புதிய சாதனைகளை படைத்து வருகின்றது.

ஜவான் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலக அளவில் 129 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதையடுத்து அடுத்தடுத்த நாட்களின் வசூல் குறித்த தகவல்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து வந்தது. இந்நிலையில் ஜவான் திரைப்படத்தின் 16வது நாள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஜவான் திரைப்படம் வெளியான முதல் 16 நாட்களில் 953.97 கோடி அதாவது கிட்டத்தட்ட 954 கோடி ரூபாயை உலக அளவில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 1000 கோடி ரூபாயை இன்னும் ஓரிரு தினங்களில் எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில் யாரும் இதுவரை பார்த்திராத வெற்றி என்று படக்குழு குறிப்பிட்டுள்ளது.