1000 கோடி வசூலை நெருங்கும் ஜவான் திரைப்படம்!!! 11வது நாள் வசூல் இவ்வளவு கோடியா!!!

0
66
#image_title

1000 கோடி வசூலை நெருங்கும் ஜவான் திரைப்படம்!!! 11வது நாள் வசூல் இவ்வளவு கோடியா!!!

நடிகர் ஷாரூக்கான் அவர்களின் நடிப்பில் உருவாகி செப்டம்பர் 7ம் தேதி வெளியான ஜவான் திரைப்படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி இருக்கின்றது.

நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படத்தை இயக்குநர் அட்லி இயக்கியுள்ளார். ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு, சஞ்சய் தத், விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ராக்ஸ்டார் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் அனிருத் ஜவான் திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். ஜவான் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியது. ஜவான் திரைப்படம் வெளியானது முதல் தற்பொழுது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜவான் திரைப்படத்தின் 11வது நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி இருக்கின்றது.

ஜவான் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலக அளவில் 129.6 கோடி ரூபாயை வசூல் செய்தது என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் ஜவான் திரைப்படம் முதல் நாளில் அதிகம் வசூலித்த திரைப்படங்களில் முதல் திரைப்படமாக உள்ளது.

இதையடுத்து ஜவான் திரைப்படம் இரண்டாவது நாளின் பொழுது 240 கோடி ரூபாயாகவும், மூன்றாவது நாளின் பொழுது 384 கோடியாகவும், நான்காவது நாளின் பொழுது ஜவான் திரைப்படம் 520 கோடியை வசூல் செய்துள்ளது. இதையடுத்து தொடர்ந்து உலக அளவில் வசூலில் சாதனை படைத்து வரும் ஜவான் திரைப்படத்தின் 11வது நாளின் வசூல் குறித்து தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி ஜவான் திரைப்படம் வெளியான செப்டம்பர் 7ம் தேதி முதல் இன்று(செப்டம்பர்18) வரை அதாவது 11 நாட்களில் 858.68 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இரண்டாவது வார இறுதி நாட்களை கடந்து ஜவான் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கெண்டிருக்கின்றது.