பாஜக- அதிமுக கூட்டணி முறிந்தது : குஷியில் அதிமுக தொண்டர்கள்!!

0
95
#image_title

பாஜக- அதிமுக கூட்டணி முறிந்தது : குஷியில் அதிமுக தொண்டர்கள்!!

பாஜக- அதிமுக கூட்டணி முடிந்ததாக அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் அவர்கள் அறிவித்துள்ளார் மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களைப் பற்றியும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்று நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக – அதிமுக கூட்டணி உறுதியானது. அன்று முதல் இன்று வரை பாஜக- அதிமுக கூட்டணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையில், நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் சரி அதற்கு அடுத்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் சரி, அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்தது. ஆனால் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள்முதல் அதிமுகவிற்கு அண்ணாமலை அவர்களுக்கு மோதல் போக்கு வெடித்தது. அண்ணாமலை அவர்கள் ஜெயலலிதா அம்மா குறித்தும், அதிமுக கட்சி குறித்தும், பேரறிஞர் அண்ணா குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். இது அதிமுக மூத்த நிர்வாகிகளுக்குப் பிடிக்கவில்லை. முன்னாள் அமைச்சர்களான எம்.சி. சம்பத் செல்லூர் கே. ராஜு, ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடுமையாக அண்ணாமலையை விமர்சித்து வந்தனர். இருப்பினும் பாஜக அதிமுக கூட்டணி தொடர்ந்தே வந்தது. மோடி, அமித்ஷா சொல்லித்தான் பாஜக உடன் கூட்டணியில் உள்ளோம் என்றும் அதிமுகவினர் கூறிவந்தனர் இந்நிலையில் பேரறிஞர் அண்ணா அவர்களுக்குக் குறித்த அண்ணாமலை பேசியது அதிமுக மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் கோவம் அடைந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையைக் கடுமையாக விமர்சித்ததுடன், தமிழகத்தில் நோட்டாவிற்கு கீழ் ஓட்டு வாங்கும் கட்சி பாஜக என்று விமர்சித்துள்ளார் இதன் மூலம் பாஜக அதிமுக கூட்டணி முடிவடைந்தது என்பது நமக்குத் தெரிய வருகிறது.

மற்றொருபுறம் நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி., ஆன தம்பிதுரை அவர்கள் பிரதமர் மோடி அவர்களைப் புகழ்ந்து வருகிறார். இதையெல்லாம் பார்த்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் மௌனம் காத்து வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.