1000 கோடியை தாண்டி சாதனை படைத்த ஜவான்!!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!!

Photo of author

By Sakthi

1000 கோடியை தாண்டி சாதனை படைத்த ஜவான்!!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!!

Sakthi

1000 கோடியை தாண்டி சாதனை படைத்த ஜவான்!!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!!

நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் தற்பொழுது 1000 கோடி ரூபாயை தாண்டி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியிட்டு இருக்கின்றது.

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியானது. பேன் இந்தியா திரைப்படமாக வெளியான ஜவான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து ஜவான் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ஹிந்தி சினிமா வரலாற்றில் வரலாற்றுச் சாதனை படைத்தது. அதாவது இதுவரை வெளியான ஹிந்தி திரைப்படங்களில் ஜவான் திரைப்படம் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படமாக உருமாறி உள்ளது. ஜவான் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலக அளவில் 129 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.

உலகம் முழுவதும் வெற்றிகரமா தற்பொழுதும் ஓடிக் கொண்டிருக்கும் ஜவான் திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. இதையடுத்து ஜவான் திரைப்படம் தற்பொழுது 1000 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

அதன் படி ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் சேர்த்து 1004.92 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதை படக்குழு ஒரு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் ஜவான் திரைப்படம் 1000 கோடி தாண்டியதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.