மகளிர் உரிமைத் தொகை.. 3 நாட்களாக ‘ERROR’.. அவதிப்பட்டு வரும் பெண்கள்! கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு!

0
30
#image_title

மகளிர் உரிமைத் தொகை.. 3 நாட்களாக ‘ERROR’.. அவதிப்பட்டு வரும் பெண்கள்! கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு!

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக ஆட்சி பொறுப் பேற்றதும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று திரு.ஸ்டலின் தெரிவித்தார்.அதன்படி ஆட்சி பொறுப்பேற்று 2 வருடங்கள் கழித்து செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தை பற்றி ஆகா.. ஓஹோ.. என்று பேசப்பட்டு வரும் நிலையில் இதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.ஆட்சி பொறுப்பேற்றல் அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்டும்,நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கண்ணை கவரும் அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் அதன் கொடுத்த வாக்குறுதிகளை சொல்லியபடி நிறைவேற்ற வில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

நகைக்கடன் தள்ளுபடி செய்தபோது ஏழை மக்கள் நிறைய பேருக்கு இதில் பலன் கிடைக்கவில்லை.ஆனால் அதேசமயம் வசதி படைத்தவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற்றனர்.அதேபோல் தான் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திலும் ஏகப்பட்ட குளறுபடிகள் நிகழ்ந்து இருக்கிறது.இதிலும் ஏமாற்றப்பட்டவர்கள் ஏழை பெண்கள் தான்.மாதம் ரூ.1000 கிடைத்து விடும்.அதை வைத்து குடும்ப செலவு,மருத்துவ செலவு ஆகியவற்றை பார்த்து கொள்ளலாம் என்று நம்பி இருந்த பல பெண்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டும் தான்.

மாதம் ரூ.1000 பெறுவதற்காக சுமார் 1 கோடியே 70 லட்சம் விண்ணப்பங்கள் குடும்ப தலைவிகளிடம் இருந்து பெறப்பட்டது.இதில் சுமார் 65 லட்சம் விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது.மீதம் 1 கோடியே 6 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்து கடந்த செப்டம்பர் 15 அன்று இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

மேலும் இந்த திட்டத்தில் சேர நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு செப்டம்பர் 18 அன்று குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட நிலையில் மேல்முறையீடு செய்ய விரும்புவோர் அடுத்த 30 நாட்களுக்குள் இ- சேவை மையம் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.இதனை தொடர்ந்து மேல் முறையீடு செய்ய லட்சக்கணக்கான பெண்கள் இ- சேவை மையத்திற்கு படையெடுக்க தொடங்கினர்.அவர்கள் கால் கடுக்க நின்றும் ஒரு பயனும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

காரணம் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய அறிமுகம் செய்து வைத்த  www.kmut.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைஓபன் செய்தால் கடந்த 3 நாட்களாக “ERROR” என்று தான் காட்டுகிறது.இதனால் இ – சேவை ஊழியர்களும் வேலை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.மேல்முறையீடு செய்ய வந்த பெண்களும் கால் கடுக்க நின்று ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.www.kmut.tn.gov.in என்ற வெப்சைட்டில் 3 நாட்காளாக ஓபன் செய்யமுடியாமல் “ERROR” என்று மட்டுமே காட்டி வருகிறது.

இதனால் விரைவில் வெப்சைட்டை சரி செய்ய வேண்டுமென்று இ-சேவை ஊழியர்களும்,மக்களுக்கும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அது பற்றி எல்லாம் தமிழக அரசு காது கொடுத்து கேட்கவில்லை,உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை என்று அரசியல் கட்சி தலைவர்களும்,பொதுமக்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.