காரின் கதவை திறந்து தொங்கிய படி பயணம் செய்த பிரதமர்! போக்குவரத்து விதிகளை மீறியதாக புகார்

Photo of author

By Savitha

காரின் கதவை திறந்து தொங்கிய படி பயணம் செய்த பிரதமர்! போக்குவரத்து விதிகளை மீறியதாக புகார்

Savitha

காரின் கதவை திறந்து தொங்கிய படி பயணம் செய்த பிரதமர்! போக்குவரத்து விதிகளை மீறியதாக புகார்

பிரதமர் மோடி கொச்சியில் ரோடு ஷோவில் காரின் கதவை திறந்து தொங்கிய படி பயணம் செய்த பிரதமர் போக்குவரத்து விதிகளை மீறி, பயணம் செய்ததாக திருவில்வமலையைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

கேரளாவிற்கு இரண்டு நாட்கள் சுற்று பயணம் வந்த பிரதமர் மோடி கொச்சியில் நடந்த ரோடு ஷோ மக்களின் வரவேற்பை பார்த்து காரில் இருந்து இறங்கி நடந்தார். பின் பிரதமர் மோடி காரின் கதவை திறந்து நின்ற படி மக்களை பார்த்து கை அசைத்து பயணம் செய்தார்.

இது போக்குவரத்து விதிகளை மீறி, திறந்திருந்த கார் கதவில் தொங்கியபடி பயணம் செய்ததாக திருவில்வமலையைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார். ஓட்டுநரின் பார்வையை மறைக்கும் வகையில் கண்ணாடி பூக்களால் மூடப்பட்டிருந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் அனைவருக்கும் பொருந்தும் என்பதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார்தாரர் கோரியுள்ளார்.

இதுகுறித்து டிஜிபி மற்றும் மோட்டார் வாகனத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதே போன்று திருவனந்தபுரத்திலும் மோடி இதே மாதிரி பயணம் செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.