பாலியல் தொல்லை புகாரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பாஜக எம்பி மீது கிரிமினல் வழக்கு

0
124
#image_title

பாலியல் தொல்லை புகாரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பாஜக எம்பி மீது கிரிமினல் வழக்கு

பாலியல் தொல்லை புகாரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான ப்ரிஜ் பூஷண் ஷரணுக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்வதற்கு முன் ஆரம்பகட்ட விசாரணை நடத்த வேண்டியுள்ளது – உச்சநீதிமன்றத்தில் டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் நேரடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் எண்ணம் கொண்டாள் உடனடியாக வழக்கு பதிவு செய்ய தயார் – உச்ச நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தெரிவித்தது.

இது தொடர்பாக 7 மல்யுத்த வீராங்கனைகள் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையான அமர்வு முன், மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் நேற்று ஆஜராகி, மைனர் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் ப்ரிஜ் பூஷண் ஷரணுக்கு எதிராக அளித்த பாலியல் புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய மறுக்கின்றனர். இது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என முறையிட்டார்.

முறையீட்டடை ஏற்ற உச்சநீதிமன்றம், பாலியல் தொல்லை புகார் தொடர்பாகஇந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான ப்ரிஜ் பூஷண் ஷரணுக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க டெல்லி காவல்துறைக்கும்,
டெல்லி அரசுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இந்த நிலையில் டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பாலியல் தொல்லை புகாரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான ப்ரிஜ் பூஷண் ஷரணுக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்வதற்கு முன் ஆரம்பகட்ட விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் நேரடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் எண்ணம் கொண்டால் உடனடியாக வழக்கு பதிவு செய்ய தயார் என தெரிவித்தார்.

இதற்கு நீதிபதிகள் நெல்லிக்காவல் துறையின் நிலைப்பாட்டை ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெறும் விசாரணையின் போது முன் வைக்கலாம் என தெரிவித்தனர்.