எம் ராஜேஷ் – ஜெயம் ரவி கூட்டணியில் புதுபடம்… ஹீரோயினாக பிரியங்கா மோகன்… ஷூட்டிங் எப்போது?

Photo of author

By Vinoth

எம் ராஜேஷ் – ஜெயம் ரவி கூட்டணியில் புதுபடம்… ஹீரோயினாக பிரியங்கா மோகன்… ஷூட்டிங் எப்போது?

Vinoth

எம் ராஜேஷ் – ஜெயம் ரவி கூட்டணியில் புதுபடம்… ஹீரோயினாக பிரியங்கா மோகன்… ஷூட்டிங் எப்போது?

இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ள புதிய படம் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

இயக்குனர் எம் ராஜேஷ் தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை படங்களின் மூலம் கவனம் பெற்றவர். அவர் இயக்கிய சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால் அடுத்தடுத்து ஒரே டெம்ப்ளேட்டில் சிக்கியதால் அவர் படங்கள் தோல்வியை சந்தித்தன.

இந்நிலையில் இப்போது அவர் எப்படியாவது ஒரு ஹிட் கொடுக்க போராடிக்கொண்டிருக்கும் நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் படத்தின் பூஜை ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதை தொடர்ந்து குறுகிய காலத்தில் மொத்த படத்தையும் முடிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.