கோவை மாவட்டத்தில் தந்தையையடுத்து மகன் உயிர்யிழப்பு! காரணம் என்ன போலீசார் விசாரணை!

0
121
The death of the son after the father! The reason why the police investigation!
The death of the son after the father! The reason why the police investigation!

 கோவை மாவட்டத்தில் தந்தையையடுத்து மகன் உயிர்யிழப்பு! காரணம் என்ன போலீசார் விசாரணை!

கோவை மாவட்டம் அருகே உள்ள காந்தி மாநகரை சேர்ந்தவர் அர்ஜூன். இவர் அதே பகுதியில் உள்ள  ஒரு ஐடி நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். மேலும் இவர் கடந்த 27 ஆம் தேதி அர்ஜுனின் தந்தை சந்திரசேகர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். தந்தை இருந்தால் அர்ஜுன் கடந்த சில நாட்களாக அதிக மன வேதனையில்   காணப்பட்டு வந்தார். வீட்டில் தனியாக இருந்த அவர் தந்தை இறந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் வீட்டில் உள்ள அவரது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் இதை அறிந்த வீட்டிலிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து பின்னர் அக்கம் பக்கத்தில் உதவியுடன் அவரை மீட்டுனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து பீளமேடு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த  தகவலின் பேரில் பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தற்கொலை செய்து கொண்ட அர்ஜுனின் உடலை டைப் பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பீளமேடு  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K