ஜீன்ஸ் போட்டா ’அதுக்கு’ ஆபத்தா?

Photo of author

By Savitha

ஜீன்ஸ் போட்டா ’அதுக்கு’ ஆபத்தா?

ஹைத்ராபாத்தில், பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் நவ நாகரீக இளம் பெண் ஸ்வாதி. தன் தோழியுடன் காரில் வெகு தூரம் பயணம் செய்துள்ளார். ஒரு நான்கைந்து மணி நேரம் கழித்து, இடுப்பிற்குக் கீழே உணர்வற்ற நிலை இருப்பதை உணர்கிறார். தன் தோழியிடம் விஷயத்தை சொல்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் மயங்கி விடுகிறார் ஸ்வாதி.

மருத்துவமனையில் சேர்த்த பிறகு தான் அவரின் கால்கள் மருத்து வீங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். அவரின் பேண்டுகளை கழட்ட முடியாமல், கிழித்து எடுத்துள்ளனர். என்ன தான் பிரச்சினை என்று மருத்துவர்களிடம் கேட்டால், டைட்டான ஜீன்ஸ் அணிந்திருந்ததால், அவரின் கால்களுக்கு சரியான ரத்த ஓட்டம் கிடைக்கவில்லை. இதனால், நரம்புகள் பாதிக்கப்பட்டு கால்கள் உணர்வற்ற நிலைக்கு வந்துள்ளது.

திடீரென, ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட மாறுபாட்டால் ரத்த அழுத்தம் அதிகமாகி மயக்கம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அவருக்கு, நரம்பு ஊசி போடப்பட்டு வருகிறது. ஒரு இறுக்கமான ஜீன்ஸ் இவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்துமா? ஆம், நாம் நாகரீகம் என்ற பெயரில் செய்யும் இது போன்ற தவறுகள் நம் உயிருக்கே உலை வைக்கின்றன.

இறுக்கமான ஜீன்ஸ்களால், ஆண்களுக்கு குழந்தையின்மை பிரச்சினையும் ஏற்படுகிறது என்ற விஷயம் தெரியுமா உங்களுக்கு. கோமணம் கட்டி, கொளுத்தும் வெயிலில் வேலை செய்யும் போது, எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. ஆனால் பேஷன் என்ற பெயரில், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம் சந்ததிக்களுக்கே வேட்டு வைக்கிறது.

இறுக்கமான ஜீன்ஸ்களை தொடர்ந்து அணிவதால் ஆண்களின் விதைப்பைகளின் அமைப்பே மாறிவிடுகிறது. மேலும், இறுக்கமான உடைகள் அணியும்போது ஆணின் விதைப்பைகள் தொடர்ந்து உடலோடு அழுத்தி இறுக்கி வைக்கப்படுகின்றன. அது விதைப்பைகளின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்து விந்தணு உற்பத்தியை பாதிக்கும்.

எனவே குழந்தை பெற விரும்பும் ஆண்கள் ஆரோக்கியமான விந்தணு உற்பத்திக்கு உதவும் வகையில் இறுக்கமான ஜீன்ஸ் அணியாமல், காற்றோட்டமான ஆடைகளை அணிய வேண்டும். இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் பெண்களுக்கு கருப்பை கோளாறையும், குழந்தைப் பேற்றில் சிக்கலையும் ஏற்படுத்தி விடுகிறது.

இதுமட்டுமல்ல, ஜீன்ஸ் அணிவதால், சிறுநீர்ப்பாதையில் தொற்று, நெஞ்செரிச்சல் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உடல் பாகங்கள் வெளியே தெரிய, உடம்பை இறுக்கி ஆடைகளை அணிவதால், பாதிப்பு நமக்குத் தான் என்பதை உணர வேண்டும். நம்ம ஊர் சீர்தோஷன நிலைக்கு ஏற்ற ஆடைகளை அணிவதில் என்ன பிரச்சினை. சிந்திப்போம், செயல்படுவோம்.