14 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ஜெஸ்ஸி – கார்த்திக் ஜோடி.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

0
231
Jessie – Karthik Jodi Reunited After 14 Years
Jessie – Karthik Jodi Reunited After 14 Years

14 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ஜெஸ்ஸி – கார்த்திக் ஜோடி.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும் இப்போது வரை இந்த படம் மீது ரசிகர்களுக்கு இருக்கும் கிரேஸ் குறையவே இல்லை என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு இந்த படம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளியான சமயத்தில் அதில் ஜெஸ்ஸி என்ற கேரக்டரில் நடித்த த்ரிஷாவை ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அடுத்த சில மாதங்களுக்கு த்ரிஷா அலைதான் அடித்தது. அந்த அளவிற்கு த்ரிஷா தமிழ் ரசிகர்கள் மனதில் ஜெஸ்ஸியாகவே வாழ்ந்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த ஜோடி மீண்டும் இணைய உள்ளது.

அதன்படி 14 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஜெஸ்ஸி – கார்த்திக் ஜோடியை ரசிகர்கள் திரையில் பார்க்க உள்ளனர். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் தான் இந்த சம்பவம் நடக்க உள்ளது. இதில் கமல், துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் சிம்பு என ஒரு பெரிய ஹீரோக்கள் படையே நடிக்க உள்ளது. இவர்கள் தவிர த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மேர் பகுதியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் பணிகளில் கமல்ஹாசன் பிசியாக இருப்பதால் அவர் அல்லாத காட்சிகளை ராஜ்ஸ்தானில் படமாக்கி வருகிறார்கள். விரைவில் சைபீரியாவில் நடைபெறவுள்ள படப்பிடிப்பில் கமல் பங்கேற்பார் என்று எதிபார்க்கப்படுகிறது. மேலும், இந்த படத்தில் த்ரிஷா சிம்புவிற்கு ஜோடியாக நடிக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Previous articleபாஜக கட்சியின் ஆட்சி காலாவதி ஆகும் நேரம் வந்துவிட்டது..!! தெலங்கானா முதலமைச்சர் பேட்டி..!! 
Next articleஅலமாரியில் விளையும் கால்நடை தீவனம்..மாற்றி யோசித்த நாமக்கல் விவசாயி..!!