தங்க நகை அடமான வைத்திருக்கக் கூடியவர்களுக்கான புதிய விதிகளை இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில் அதற்கான எதிர்ப்புகள் மிகவும் வலுவானதாக மாறி வருகிறது. ஒருபுறம் முழுவதுமாக அசலையும் வட்டியையும் கட்டி தங்களுடைய நகையை மீட்க முடியாத பயனாளிகள் இதற்கான எதிர் குரலை கொடுத்து வருகின்றனர்.
மறுபிறமோ தங்களால் முடிந்த பணம் மற்றும் கந்துவட்டி பெற்றாவது தங்களுடைய நகைகளை நீட்டு சர்வதேச வங்கிகளில் இருந்து கூட்டுறவு வங்கிகளில் பலரும் நகைகளை மாற்றி வைத்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையில் இந்தியன் ரிசர்வ் வங்கியானது நகைய அடகு வைத்துள்ளவர்களுக்கு நன்மை பயக்கும் விதமாகத்தான் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது என தெரிவித்திருக்கிறது. ஆனால் மக்களிடையே உண்மை அவ்வாறு இல்லை. நகையை மீட்பதற்காக வங்கிகளை விட்டு மீண்டும் கந்து வட்டிக்காரர்களிடம் மக்கள் சென்று கொண்டிருக்க கூடிய அவல நிலையானது தற்பொழுது உருவாகி உள்ளது.
இது குறித்து வங்கிகள் விளக்கம் தெரிவிக்கும் பொழுது, 2 லட்சம் ரூபாய் வரை நகை கடன் வைத்துள்ளவர்கள் எப்பொழுதும் போல வருடத்திற்கு ஒருமுறை வட்டி மட்டும் செலுத்தி மறு அடகு வைத்துக் கொள்ளலாம் என்றும் அதற்கு மேல் நகைகளை அடமானம் வைத்தவர்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயமாக வட்டியும் அசலும் சேர்த்து செலுத்த வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் தற்பொழுது 2 லட்சம் ரூபாயாக இருக்கக்கூடிய வரம்பு நிலையை 4 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் 4 லட்சம் ரூபாயாக உயர்த்தும் பட்சத்தில் பல ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறுவர் என்றும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது. எனவே இது குறித்த கூடிய விரைவில் இந்தியன் ரிசர்வ் வங்கியானது பரிசீலனை செய்து அதற்கான முடிவுகளை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.