ஜிகா வைரஸ் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு! அமைச்சர் அதிரடி தகவல்!

Photo of author

By Jayachithra

ஜிகா வைரஸ் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு! அமைச்சர் அதிரடி தகவல்!

Jayachithra

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜிகா வைரஸ் தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜிகா என்பது ஒரு வகையான கொசு மூலம் பரவும் வைரஸ் என்று சுகாதாரத்துறையில் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை செய்து வருவதாக கூறியுள்ளார்.

வைரஸை பரப்பும் கொசு, நல்ல தண்ணீரில் உருவாகும் என்ற காரணத்தினால் வீடுகளை சுற்றி நீர் தேங்காத வண்ணம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.