BSNL – “பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்” : இந்த நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம். இது இந்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான “BSNL” இப்போது “டைரக்ட்-டு-டிவைஸ்” என்ற தனது புதிய தொலைத்தொடர்பு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொலை தொடர்பு நிறுவனம் தற்போது “கலிபோர்னியாவில்” உள்ள தகவல் தொடர்ப்பு தொழில்நுட்ப நிறுவனமான “வியாசாட்டுடன்” இணைந்து அறிமுகப்படுத்தியுள்ள சேவைதான், (india’s first direct to device satellite connectivity service) இந்திய முதல் நேரடி சாதன செயற்கைகோள் இணைப்பு சேவை.
இந்த இரு நிறுவனங்களும் இணைந்து மக்களுக்கு தேவையான தொலைத்தொடர்பு சேவையை இந்தியாவின் எந்த மூலையில் இருக்கும் மக்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் தொலைத்தொடர்பு சேவையை பெறும் நிலையை அடைவதை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க தொழிலதிபர் “எலான் மஸ்க்” அவர்கள் இந்தியாவிற்குள் தனது தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான “Starlink” செயற்கைகோள் சேவையை கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இவர் இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL-ன் (india’s first direct to device satellite connectivity service) இந்த சேவையை பார்த்து வியப்பில் உள்ளார்.
மக்கள் இந்த சேவையை பெறும் பட்சத்தில், இதில் இணையும் பயனர்கள் செல்லுலார் தொலைத்தொடர்புகளை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த இணைப்புகள் புவிசார் செயற்கைக்கோள் (Geostationary satellites) என்ற “இருவழித் தொடர்பை” வழங்கும். இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து சுமார் “36,000 கிமீ” தொலைவில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சேவைக்கான சோதனை முயற்சிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்த சேவை இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கான கட்டணம் பற்றிய எந்த விவரமும் BSNL நிறுவனம் வெளியிடவில்லை.