ஜியோ நிறுவனத்தின் புதிய லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்… இத்தனை அம்சங்கள் கொண்ட ஜியோ லேப்டாப்பின் விலை இவ்வளவு தானா… 

Photo of author

By Sakthi

 

ஜியோ நிறுவனத்தின் புதிய லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்… இத்தனை அம்சங்கள் கொண்ட ஜியோ லேப்டாப்பின் விலை இவ்வளவு தானா…

 

இந்தியாவில் முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம் தனது புதிய லேப்டாபை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

ரிலையன்ஸ் ரிடெயில் நிறுவனம் தனது புதிய ஜியோபுக் லேப்டாப்பை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பல சிறப்பம்சங்களை கொண்ட இந்த ஜியோ புக் லேப்டாப் விலை 16499 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஜியோபுக் லேப்டாப் 990 கிராம் எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டைலிஸ் மேட் பினிசிங் செய்யப்பட்டு மெல்லிய தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

 

இந்த புதிய ஜியோ புக் லேப்டாப்பில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராஸசர், 4 ஜிபி ரேம், 256 ஜிபி ரோம் மெமரி மற்றும் கூடுதலாக மெமரியை நீட்டித்துக் கொள்ளும் வசதி உள்ளது. மேலும் 11.6 இன்ச் ஆன்டி-கிளேர் ஹெச்.டி அல்ட்ரா ரெஷல்யூசன் கொண்ட திரை, ஸ்கிரீன் எக்ஸ்டென்ஷன் செய்யும் வசதி, இன்டகிரேட் செய்யப்பட்ட சாட்பாட், வைர்லெஸ் பிரிண்டிங் ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளது. மேலும் இதில் 4ஜி எல்டியி, டூயல் வைபை பேண்ட், ஹெச்.டி வெப் கேமரா, HDMI போர்ட்டுகள், பில்ட்-இன் யு.எஸ்.பி ஆகியவையும் 4000 எம்.ஏ.ஹெச் திறன்.கொண்ட பேட்டரியும், எட்டு மணி நேரத்திற்கான பேக்கப் வசதியும் வழங்கப்படுகின்றது.

 

மேலும் 2 மெகா பிக்சல் கேமாரா, ஜியோ ஓஎஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்பினிட்டி கிபோர்ட், புளூடுத் வசதி, ஆடியோ போர்ட் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜியோ டிவி, ஜியோ கிளவுட் கேம்ஸ், ஒரு வருடத்திற்கு 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ், ஜியோ பியான் கோடிங், குயிக்ஹீல் பேரண்டல் கண்ட்ரோல், டிஜி பாக்ஸ் கொண்ட வசதிகளுடன் கூடிய இந்த ஜியோபுக் லேப்டாப் 16499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த ஜியோ புக் லேப்டாப்பை அமேசான், ஜியோ நிறுவனத்தின் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்ஸ், ஆன்லைன் ஸ்டோர்ஸ் ஆகியவற்றில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.