Jio நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்!! வெறும் 50 ரூபாயில் 800 TV சேனல்கள்.. 13 OTT!!

Photo of author

By Gayathri

வீடுகளில் பயன்படுத்தக்கூடிய டிஸ் மற்றும் டிடிஎச் கனெக்சன்களுக்கு இணையாக ஜியோ நிறுவனமானது அதிரடியான புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

 

ஜியோ நிறுவனத்தின் 50 நாள் ஜியோ ஏர்பைபர் திட்டம் :-

 

இந்த சலுகையின் கீழ், ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தங்கள் பழைய டிடிஎச் சேவைகளை விட்டுவிட்டு ஜியோ ஏர்ஃபைபருடன் லேட்டஸ்ட் மற்றும் பெஸ்ட் பொழுது போக்கை அனுபவிக்க உதவுவதாக உள்ளது.

 

குறிப்பாக இதன் கீழ் கிடைக்கக்கூடிய நன்மைகள் :-

 

✓ 800 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் டிவி சேனல்கள் (800 digital TV channels)

 

✓ 13 க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்ஸ் (13+ OTT apps)

 

✓ வரம்பற்ற வைஃபை (Unlimited Wi-Fi)

 

✓ புதிய வாடிக்கையாளர்கள் ரூ. 1,000 மதிப்புள்ள இலவச நிறுவல் (Free installation worth Rs.1,000)

 

✓ ரூ.1,000 மதிப்புள்ள இலவச கூப்பன் (Free coupon worth Rs.1,000)

 

✓  ரூ. 16,500 மதிப்புள்ள இலவச ஹோம் டிவைஸ்களும் (Free home devices worth Rs.16,500) கிடைக்கும்

 

ரிலையன்ஸ் ஜியோவின் கூற்றுப்படி, வாடிக்கையாளர்கள் ரூ.50 முன்பணத்தை (Rs.50 advance) செலுத்தி இந்த சேவையை முன்பதிவு செய்யலாம், இது ஃபைனல் பேமண்ட்டில் அட்ஜெஸ்ட் (Adjusted in final payment) செய்யப்படும். இந்த 50 நாள் ஆபரின் கீழ் ஜியோ 5ஜி பயனர்கள் (Jio 5G Users), ஜியோ ஏர்ஃபைபர் சேவையை ரூ.1,111 க்கு பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த சலுகை குறித்த பிரத்யேக அறிவிப்புகள் எஸ்எம்எஸ் (SMS) வழியாகவும், மைஜியோ ஆப் நோட்டிஃபிகேஷன் (MyJio app notification) வழியாகவும் மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) வழியாகவும் ஜியோ பயனர்களுக்கு அனுப்பப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

 

மேலும் ஜியோ இணையதளத்தின்படி (Jio Website), இந்த ஆஃபர் நவம்பர் 23, 2024 அன்று தொடங்கியது, மேலும் அறிவிப்பு வரும் வரை அணுக கிடைக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.