ஜியோவின் புதிய திட்டம்!! 84 நாட்களுக்கு குறைந்த விலையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்!!

Photo of author

By Gayathri

ஜியோ நிறுவனம் ஆனது தன்னுடைய பயனர்களுக்கு பலவித திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இதனைத் தொடர்ந்து தற்பொழுது 84 நாட்களுக்கான அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் STD கால் உள்ள பேக்கினை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூபாய் 479 க்கு ஜியோ வில் உள்ள இத்திட்டம், 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ் டி டி கால்ஸை வழங்குவதோடு மட்டுமின்றி, 84 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 6 ஜிபி டேட்டாவையும் வழங்கி வருகிறது. இதனோடு மட்டுமின்றி ஆயிரம் SMS களையும் இத்திட்டத்தின் மூலம் ஜியோ நிறுவனம் ஆனது வழங்குகிறது.

இத்திட்டமானது கால்சிற்கு மட்டும் இம்பார்ட்டன்ஸ் கொடுக்கக்கூடிய அனைவருக்கும் மிக முக்கியமானதாக அமையும் என்றும், மேலும் அலுவலகங்களில் அல்லது வேலை பார்க்கக் கூடிய நிறுவனங்களில் வைஃபை கனெக்ஷன் உள்ளவர்களுக்கும் இது பெரிதும் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தின் கீழ் தரப்படும் சிறப்பு சலுகைகள் :-

ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் போன்றவற்றிற்கான இலவச ஆக்சஸ் கிடைக்கிறது. ஜியோ டிவி மூலமாக யூசர்கள் லைவ் டிவி சேனல்களைப் பார்க்கலாம். இந்த பட்ஜெட் ஃபிரண்ட்லி ஜியோ ரீசார்ஜ் திட்டம் ஜியோ போர்டல் மற்றும் மை ஜியோ அப்ளிகேஷனில் உள்ள ப்ரீபெய்டு கேட்டகிரியில் வேல்யூ செக்ஷனில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.