JOB ALERT: பயிற்சி காலத்தில் ரூ.60,000 சம்பளம்!! பிப்ரவரி 20 கடைசி தேதி!!

Photo of author

By Gayathri

மத்திய அரசிற்கு கீழ் பணி புரியக்கூடிய வேளாண்மை காப்பீட்டு நிறுவனத்தில் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி விவரங்கள் :-

பணி : ஸ்கேல் 1 அதிகாரி

சம்பளம் : பயிற்சி காலத்தில் ரூ. 60,000. பயிற்சி முடிந்தவுடன் நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றவுடன் ரூ.90,000

விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 20

தேர்வு முறை :-

இரண்டு முறைகளில் இந்த தேர்வானது உணர்த்தப்படும் என்றும் முதல் முறை கணினி தேர்வாகவும் அதன் பின் நேர்காணலாகவும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி முறையில் தேர்வு செய்யப்படும் நபர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் என்றும் ஆன்லைன் தேவை காண தேதி மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேதி தெரிவிக்கப்பட்ட பின் தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பு தேர்வுக்கான பயிற்சிகள் ஆன்லைன் வழியே வழங்கப்படும் என்றும் SC/ST/OBC/PWD போன்ற பிரிவுகளை சேர்ந்தவர்கள் தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்தால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள aicofindia.com என்ற வேளாண்மை ஆணையத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தை சென்று காணவும்.