ஜாப் அலர்ட்: திருச்சி NIT-ல் கை நிறைய சம்பளத்தில் வேலை!! இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்!
திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்(NIT) காலியாக உள்ள Data Entry Operator பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணியிடம்: திருச்சி
நிறுவனம்: தேசிய தொழில்நுட்பக் கழகம்(NIT)
கலிப்பாணியிடம்: பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
Data Entry Operator பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.65% மதிப்பெண்ணுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு
திறனறிவுத் தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் https://nittnt.samarth.edu.in/index.php/site/login என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
முகவரி:
National Institute of Technology,
Tiruchirappalli – 620 015.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 25-04-2024