8 முதல் 10 வகுப்பு படித்தவர்களுக்கு இந்து சமய அறநிலைத்துறையில் உடனடி வேலை!

0
130

8 முதல் 10 வகுப்பு படித்தவர்களுக்கு இந்து சமய அறநிலைத்துறையில் உடனடி வேலை! இது தான் கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்!

 

படித்த மற்றும் படிக்காத இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்பு இன்றி உள்ளனர். இதில் ஒரு சிலர் அரசாங்க வேலையை எதிர்பார்த்தும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கான அரிய வாய்ப்பு தான் இது.

தற்பொழுது இந்து சமய அறநிலை துறையானது வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. வடபழனி திருக்கோவிலில் பணியாற்றுவதற்கு இந்து சமய அறநிலைத்துறை வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது.

இதில் பணிபுரிய எட்டு முதல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது எனக் கூறியுள்ளனர். இளநிலை உதவியாளர், தட்டச்சர் ,ஓட்டுநர், உதவி மின் பணியாளர், உதவி அர்ச்சகர்,நாதஸ்வரம், உதவி பரிசாகாரம் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 23 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை என கூறியுள்ளனர். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் அஞ்சல் மூலம் அவர்களுக்கு உங்களது விவரங்களை அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய 04.10.2022 கடைசி நாள் ஆகும். மேலும் இது குறித்து விவரங்களை hrce.tn.gov.in இன்றைய இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Previous articleபஞ்ச நந்தி வகைகள்!
Next articleமுட்டை பஜ்ஜி! அஹா என்ன ருசி வாங்க டரை செய்யலாம்!