பஞ்ச நந்தி வகைகள்!

0
94

சிவபெருமான் வசித்து வரும் கைலாய மலையை காதல் காப்பவராக இருப்பவர் நந்தி பெருமான். கோவில்களில் சிவபெருமானின் முன்பாக வீற்றிருக்கும் பாக்கியம் பெற்றவர் நந்தி பெருமான். இந்த நந்தியில் 5 வகைகள் இருக்கின்றன. இதை அஞ்ச நந்திகள் என தெரிவிப்பார்கள். அவற்றை தற்போது நாம் காணலாம்.

போக நந்தி

ஒருமுறை பார்வதியும், பரமேஸ்வரனும், பூலோகம் செல்ல எண்ணினார்கள். அப்போது இந்திரன் நந்தி வாகனமாகி அவர்களை பூலோகம் அழைத்துச் சென்றார். இவரே போக நந்தி ஆவார். போக நந்தி அல்லது அபூர்வ நந்தி என்றழைக்கப்படும் இந்த நந்தியானது கோவிலுக்கு வெளியே அமைந்திருக்கும் என்கிறார்கள்.

பிரம்ம நந்தி

பிரம்மன் படைப்புத் தொழிலை தொடங்குவதற்கு முன்னர் சிவனிடம் உபதேசம் பெற விரும்பினார். சிவபெருமான் உயிர்களை பாதுகாக்க அடிக்கடி உலா செல்வதால், ஓரிடத்திலிருந்து உபதேசம் பெற பிரம்மதேவனால் முடியவில்லை. ஆகவே நன்றி உருவத்துடன் சிவனை சுமந்து சென்றபடி உபதேசம் பெற்றுக் கொண்டார். இதனை பிரம்ம நந்தி என தெரிவிப்பார்கள். இந்த நந்தி கதையை சிறப்பாக பிரகாரம் மண்டபத்தில் காணலாம்.

ஆன்ம நந்தி

பிரதோஷ கால பூஜை ஏற்கும் நந்தியை ஆன்ம நந்தி என தெரிவிக்கிறார்கள். இது கொடிமரம் அருகே இருக்கும். அனைத்து ஆன்மாக்களிலும், இறைவன் இருப்பதால் அந்த ஆன்மாக்களின் வடிவமாக ஆன்ம நந்தி இருக்கிறது.

மால்விடை

மால் என்றால் மகாவிஷ்ணு விடை என்றால் எருது. திரிபுராந்தகர் என்ற 3 அசுரர்களை அழிப்பதற்காக சிவபெருமான் செல்லும் போது, மகாவிஷ்ணு நந்தியாக வடிவமெடுத்து அவரை சுமந்து சென்றார். மால்விடை என்று சொல்லப்படும் இந்த நந்தியானது கொடி மரத்திற்கும், மகா மண்டபத்திற்குமிடையில் அமைந்திருக்கும்.

தரும நந்தி

இது கருப்பு கிரகத்தில் சிவலிங்க பெருமானுக்கு மிக அருகில் அமைந்திருக்கும். ஊழி காலத்தின் முடிவில் உலக உயிர்கள் அனைத்தும் உமாபதிக்குள் அடங்கிவிடும். அந்த சமயத்தில் தர்மம் மட்டுமே நிலைத்து நிற்கும். அதுவே ரிஷபம் ஆகிறது. இது தர்ம நந்தி.