12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு நேர்காணல் அடிப்படையில் ஊரக வளர்ச்சி வாரியத்தில் வேலை!!
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் காலியாக உள்ள மூத்த அறிவியலாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.இப்பணிக்கு தகுதி விருப்பம் இருப்பவர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற ஏப்ரல் 16 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை: அரசு வேலை
நிறுவனம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியம் (TNBRD)
பணியின் பெயர்:
1)மூத்த அறிவியலாளர்
2)சுருக்கெழுத்து தட்டச்சர்
காலிப் பணியிடங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வி தகுதி:
மூத்த அறிவியலாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கு குறைந்தப்பட்ச வயது 18 என்றும் அதிகப்பட்ச வயது 47 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஊதிய விவரம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு Pay Level 13 A as per 7th CPC முறைப்படி ஊதியம் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
1)எழுத்து தேர்வு
2)நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி
மூத்த அறிவியலாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணிகளுக்கு தகுதி,விருப்பம் உள்ள நபர்கள்
https://tnbrdngo.org/EVENTS/NOTI012024TNBRD.PDF என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு தேவையான ஆவணங்களுடன் தபால் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.04.2024