இந்திய மசாலா வாரியத்தில் மாதம் ரூ.35000 சம்பளத்தில் வேலை! 2 நாட்களே மீதம்.. உடனே விண்ணப்பியுங்கள்!

0
39
#image_title

இந்திய மசாலா வாரியத்தில் மாதம் ரூ.35000 சம்பளத்தில் வேலை! 2 நாட்களே மீதம்.. உடனே விண்ணப்பியுங்கள்!

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய மசாலா வாரியத்தில் (Spices Board) காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதன்படி எக்சிக்யூட்டிவ் (MARKETING),எக்சிக்யூட்டிவ்(DEVELOPMENT),TRADE ANALYST உள்ளிட்ட பணிகளுக்கு தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் நபர்களின் விண்ணப்பங்கள்
செப்டம்பர் 9 ஆம் தேதி வரை வரவேற்கப் படுகின்றன.

நிர்வாகம் : இந்திய மசாலா வாரியம் ( Spieces Board india)

பணி:

1.எக்சிக்யூட்டிவ் (MARKETING)

2.எக்சிக்யூட்டிவ்(DEVELOPMENT)

3.TRADE ANALYST

பணியிடம்: இந்தியா முழுவதும்

கல்வி தகுதி:

எக்சிக்யூட்டிவ் (Marketing) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இருக்கின்ற விண்ணப்பதாரர் மார்க்கெட்டிங் பிரிவில் எம்.பி.ஏ. படிப்பில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும்.எக்சிக்யூட்டிவ்(DEVELOPMENT) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இருக்கின்ற விண்ணப்பதாரர் Agri / Horticulture / Forestry பாடங்களில் இளநிலை பட்டம் அல்லது தாவரவியல் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும்.TRADE ANALYST பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இருக்கின்ற விண்ணப்பதாரர் பொருளியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*எழுத்துத் தேர்வு

*நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர் கூடுதல் விவரங்கள் பெற https://www.indianspices.com/ மற்றும் https://www.indianspices.com/opportunities.html என்ற அதிகாரபூர்வ இணையாளத்தை அணுகவும்.பூர்த்தி செய்த விண்ணப்பத்தை  [email protected]. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கடைசி தேதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 09-09-2023 கடைசி தேதி ஆகும்.