இந்தியாவை போல பெயர்களை மாற்றிக் கொண்ட நாடுகளின் பட்டியல்!!! இது நம்ம லிஸ்டலயே இல்லையேப்பா!!! 

0
70
#image_title

இந்தியாவை போல பெயர்களை மாற்றிக் கொண்ட நாடுகளின் பட்டியல்!!! இது நம்ம லிஸ்டலயே இல்லையேப்பா!!!

இந்தியா நாட்டுக்கு இந்திய என்ற பெயருக்கு பதிலாக பாரதம் என்று செப்டம்பர் 18ம் தேதி நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதே போல தங்களின் உண்மையான பெயருக்கு பதிலாக வேறு பெயரை மாற்றிய நாடுகளின் பட்டியலை இந்த பதிவில் காண்போம்.

ஏற்கனவே இந்தியா என்பதற்கு பதிலாக பாரதம் என்று பெயர் மாற்றுவதை பாஜக தலைமையிலான மத்திய அரசு திட்டமாக கொண்டு செயல்பட்டு வந்தது. இதையடுத்து இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 மாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களை அழைக்க அச்சடிக்கப்பட அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று குறிப்பிட்டிருந்தது.

அது மட்டுமில்லாமல் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கவிருக்கும் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருந்தினர்களை அழைக்கபடுவதற்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் இந்தியா என்ற பெயர் இடம்பெறவில்லை. இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாட்டில் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரதம் என்று பெயர் மாற்றும் திட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வருகின்றது.

இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெறவிருக்கும் நிலையில் அதில் கலந்துகொள்ளும் தலைவர்களை அழைக்க அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசு தலைவர் என்று அச்சடிக்கப்பட்டுள்ளது. அது போலவே தற்பொழுது(செப்டம்பர்7) பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தோனேசியா சென்றுள்ளார். அதற்கான நிகழ்ச்சி நிரலில் “பிரைம் மினிஸ்டர் ஆஃப் பாரத்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து 28 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய கூட்டமைப்பிற்கு இந்தியா என்ற பெயரை வைத்துள்ளது. அந்த காரணத்தினால் தான் பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்தியாவுக்கு பாரதம், பாரத் என்று பெயர் மாற்ற முடிவு எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றது.

இந்நிலையில் செப்டம்பர் 18ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் தொடங்கவுள்ளதாகவும், அந்த கூட்டத் தொடரில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரதம் என்று பெயர் மாற்றம் செய்யப்படலாம் என்ற செய்திகளும் பரவி வருகின்றது. இனி தங்களின் நாடுகளின் பெயர்களை தாங்களே மாற்றிக் கொண்ட நாடுகள் குறித்து பார்க்கலாம்.

உலகத்தில் உள்ள 11 நாடுகள் தங்களின் பெயர்களை பல்வேறு காலகட்டங்களில் மாற்றி அமைத்துக் கொண்டுள்ளது. சிலோனாக இருந்த இலங்கை முதல் பர்மாவாக இருந்து மியான்மராக மாறிய நாடுகள் வரை 11 நாடுகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அந்த பட்டியல் இதோ:

* 1935ம் ஆண்டுக்கு முன்பு பெர்சியா என்று அழைக்கப்பட்டு வந்த நாடு 1935ம் ஆண்டில் இருந்து ஈரான் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது.

* 1939ம் ஆண்டுக்கு முன்பு சியாம் என்று அழைக்கப்பட்டு வந்த நாடு 1939ம் ஆண்டில் இருந்து தாய்லாந்து என்று அழைக்கப்பட்டு வருகின்றது.

* 1949ம் ஆண்டுக்கு முன்பு டிரான்ஸ்ஜோர்டான் என்று அழைக்கப்பட்டு வந்த நாடு 1949ம் ஆண்டில் இருந்து ஜோர்டான் என்று அழைக்கப்பட்டு வருகின்றது.

* 1957ம் ஆண்டுக்கு முன்பு கோல்ட் கோஸ்ட் என்று அழைக்கப்பட்டு வந்த நாடு 1957ம் ஆண்டில் இருந்து கானா என்று பெயர் மாற்றம் செய்துள்ளது.

* 1966ம் ஆண்டுக்கு முன்பு பெச்சுவான்லாந்து என்று அழைக்கப்பட்டு வந்த நாடு 1966ம் ஆண்டில் இருந்து போட்ஸ்வானா என்று பெயர் மாற்றம் செய்துள்ளது.

* 1972ம் ஆண்டுக்கு முன்பு சிலோன் என்று அழைக்கப்பட்ட நாடு 1972ம் ஆண்டில் இருந்து இலங்கையாக மாறியது.

* 1997ம் ஆண்டுக்கு முன்பு ஜைர் என்ற பெயர் கொண்ட நாடு 1997ம் ஆண்டில் இருந்து காங்கோ ஜனநாயக குடியரசு என்று அழைக்கப்பட்டு வருகின்றது.

* 2002ம் ஆண்டுக்கு முன்பு இருந்து ஈஸ்ட் டிமோர் என்று அழைக்கப்பட்டு வந்த நாடு 2002ம் ஆண்டில் இருந்து டிமோர் லாஸ்டி என்று அழைக்கப்பட்டு வருகின்றது.

* 2018ம் ஆண்டுக்கு முன்பு ஸ்வாத்திலாந்து என்று அழைக்கப்பட்டு வந்த நாடு 2018ம் ஆண்டில் இருந்து எஸ்வாதினி என்று பெயர் மாற்றம் செய்து அழைக்கப்பட்டு வருகின்றது.

* 2019ம் ஆண்டுக்கு முன்பு பர்மா என்று அழைக்கப்பட்டு வந்த நாடு 2019ம் ஆண்டில் இருந்து மியான்மர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* 2022ம் ஆண்டுக்கு முன்பு இருந்து துருக்கி என்று அழைக்கப்பட்டு வந்த நாடு 2022ம் ஆண்டில் இருந்து துருக்கியே என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.