நவோதயா பள்ளியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!! மாத சம்பளம் லட்சத்தை எட்டும் உடனே விண்ணப்பியுங்கள்!!

0
192

நவோதயா பள்ளியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!! மாத சம்பளம் லட்சத்தை எட்டும் உடனே விண்ணப்பியுங்கள்!!

ம த்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளியில் 1,616 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் குறைந்தபட்சம் ரூ.44 ஆயிரத்து 900 முதல் அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 200 சம்பளமாக வழங்கப்படும்.மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணிகளில் நிரப்பப்பட உள்ளன.இதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பு பின்வருமாறு!

 

இந்த பள்ளிகளில் குரூப் ஏ, குரூப் பிரிவில் பணிபுரிவதற்காக முதல்வர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இசை, கலை, விளையாட்டு, நூலகர் மற்றும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பொறுப்புகள் என மொத்தம் 1616 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி முதல்வர் பொறுப்புக்கு 12 பேர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு 397 பேர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு 683 பேர் மற்ற தேவை ஆசிரியர்களாக 181 பேர் நியமனம் செய்யப்பட உள்ளது.

இந்த வேலைக்கான வயதை கீழே குறிப்பிட்டுள்ளது.முதல்வர் பதவிக்கு 50 வயதும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 40 வயதும், பயிற்சி பெற்ற இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 35 வயதும் மற்றும் இதர ஆசிரியர்கள் 35 வயது மிகாமலும் இருக்க வேண்டும்.முதல்வர் பதவிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பட்ட மேற்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் முடித்து பிஎட் முடித்து பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.இப்பணிக்கான சம்பளமாக.!முதல்வர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.78 ஆயிரத்து 800 முதல் ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 200 சம்பளமாக வழங்கப்படும்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.47 ஆயிரத்து 600 முதல் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 100ம், பயிற்சி பெற்ற இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்களுக்கு ரூ.44 ஆயிரத்து 900 முதல் ரூ.1.42 லட்சத்து 400 வரையும் மாத சம்பளமாக கிடைக்கும்.மேலும் CBT (Computer Based Test)முறை மற்றும் நேர்க்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 

விண்ணப்ப கட்டணமாக முதல்வர் பதவிக்கு ரூ.2000, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.1,800, மற்றவர்களுக்கு ரூ.1500 நிர்ணயம் வகுக்கப்பட்டது. எஸ்சி, எஸ்டி, பிஎச் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது. இந்த கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பம் செய்வது குறித்து காண்போம்! தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.navodaya.gov.in இணையதளம் சென்று recruitment link என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். விண்ணப்படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து அடிப்படைத் தகவலையும் எவ்வித தவறுதலும் இல்லாமல் பூர்த்திசெய்ய வேண்டும்.

விண்ணப்பம் கடைசி தேதி ஜூலை 22 ஆகும். கூடுதல் விபரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click here செய்து அறிந்து கொள்ளலாம். மேலும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய விரும்புவோர் Click here செய்து பயன்பெறலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

Previous articleஇரத்த வெள்ளை அணுக்கள் அதிகரிக்க? இந்த உணவு முறைகள் மட்டும் போதும்!
Next articleஇனி நாமும் கேமரா வாங்கலாமா? பாஜெட் இவ்வளவு தான்!