சல்மான் கானுடன் காதலில் விழுந்த பூஜா ஹெக்டே..இந்த காதலாவது திருமணத்தில் முடியுமா ?

0
213

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானை நடிகை பூஜா ஹெக்டே காதலிப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வந்துகொண்டிருக்கிறது.

பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லாதவர், இவரை பற்றி அடிக்கடி செய்திகள் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டே இருக்கும். திரையுலகில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டமும் உள்ளது, 56 வயதான இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி ஒவ்வொரு நடிகைகளுடனும் கிசுகிசுக்கப்படுவது மட்டும் தொடர்கதையான ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது இவர் பூஜா ஹெக்டேவுடன் டெட் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதன்பின்னர் தமிழில் இவருக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை, நீண்ட நாட்கள் கழித்து சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.Pooja Hegde on Salman Khan: 'If he likes you, he really likes you, and if  he doesn't, then...'

ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை, இதனை தொடர்ந்து அவர் தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே, பாலிவுட் பிரபலம் சல்மான்கானை காதலிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இருவரும் செட்டிங் செய்து வருவதாகவும், அடிக்கடி ஒன்றாக சுற்றுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 33 வயதாகும் நடிகை பூஜா ஹெக்டேவும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை, நடிகரும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை அதனால் இருவரும் விரைவில் செய்துகொள்ளலாம் என்று கூறப்படுகிறது. அதேசமயம் சல்மான்கான் இதற்கு முன்னர் பலமுறை காதலில் விழுந்தார் ஆனால் யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை அதனால் இவரையாவது திருமணம் செய்துகொள்வாரா என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Previous articleமுன்னாள் காதலரை மறக்கமுடியாமல் தவிப்பவரா நீங்கள் ? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்!
Next articleஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி!