பத்தாவது படித்திருந்தால் போதும்…தபால் அலுவலகத்தில் உடனடி வேலைவாய்ப்பு !

Photo of author

By Savitha

1) நிறுவனம்:

தமிழ்நாடு அஞ்சல் வட்டம் (Tamilnadu Postal Circle)

2) காலி பணியிடங்கள்:

மொத்தம் 3167 காலி பணியிடங்கள் உள்ளது

3) பணிகள்:

GDS

4) கல்வித்தகுதி:

GDS பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

5) வயது வரம்பு:

GDS பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 40 ஆகவும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

6) சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 முதல் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

7) தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Merit list மற்றும் Certificate Verification ஆகிய சோதனைகளின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

8) விண்ணப்பக் கட்டணம்:

GDS பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இதற்கென எவ்வித விண்ணப்ப கட்டணமும் செலுத்த வேண்டிய தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

9) விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://tamilnadupost.nic.in என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று முழு விவரங்களையும் தெரிந்துகொண்டு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

16.02.2023