எட்டாவது தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரூ.60,000 வரை சம்பளத்தில் தமிழக ஊரக துறையில் வேலைவாய்ப்பு !

0
103

1) நிறுவனம்:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை (TNRD)

2) இடம்:

நாமக்கல்

3) காலி பணியிடங்கள்:

மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது.

4) பணிகள்:

Jeep Driver

5) வயது வரம்பு:

Jeep Driver பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 42 வயது வரை இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

6) கல்வித்தகுதிகள்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

7) சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு அவர்களின் திறமையை பொறுத்து மாதந்தோறும் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

8) விண்ணப்பக் கட்டணம்:

Jeep Driver பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய தேவையில்லை.

9) தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான பணியாளர்கள் நேரடியாக நேர்காணல் முறையின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

10) விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://namakkal.nic.in/ என்கிற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பத்தை பெற்று கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

11) விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

District Collectorate,
District Collectorate Complex,
Namakkal – 637003.

12) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

31.01.2023

author avatar
Savitha