பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.39000 சம்பளத்தில் பிடிஎல்லில் வேலை!! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிடிஎல்லில் காலியாக உள்ள ப்ராஜெக்ட் என்ஜினீயர் (Project Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சார்பில் இந்திய பாதுகாப்புக்கு துறைக்கு தேவையான லாஞ்சர்கள், நீருக்கடியில் தாக்குதல் நடத்தும் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து வழங்கி வருகிறது.
ப்ராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 16 மற்றும் 17 அன்று நடைபெற இருக்கின்ற நேர்காணலில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்த பணிகள் அனைத்தும் தற்காலிகமானது.தேர்வாகும் நபர்கள் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை பணியமர்த்தப்படுவார்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை வகை: மத்திய அரசு
நிறுவனம்: பாரத் டைனமிக் லிமிடெட் (BDL)
பணி: ப்ராஜெக்ட் என்ஜினீயர் (Project Engineer)
காலியிடங்கள்: ப்ராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு மொத்தம் 34 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடம்: பெங்களூர்
ப்ராஜெக்ட் என்ஜினீயர் (மெக்கானிக்கல்) – 7 பேர்
ப்ராஜெக்ட் என்ஜினீயர் (எலக்ட்ரானிக்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/எலக்ட்ரிக்கல்) – 27 பேர்
கல்வி தகுதி:
ப்ராஜெக்ட் என்ஜினீயர் (மெக்கானிக்கல்): இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இருக்கும் நபர்கள் பிஇ,பிடெக்,பிஎஸ்சி என்ஜினீயரிங்,எம்இ,எம்டெக் படிப்புகளை மெக்கானிக்கல், இன்டஸ்ட்ரீயல் மற்றும் ப்ரோடக்சன், மெக்கானிக்கல் ப்ரோடக்சன் மற்றும் டூல்,ப்ராடக்சன், ப்ராடக்சன் டெக்னாலஜி மேனுபேக்சரிங்,ப்ராடக்சன் மற்றும் இன்டஸ்ட்ரியல்,மேனுபேக்சரிங் டெக்னாலஜி,ஏரோஸ்பேஸ்,ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும்.அதனோடு 2 ஆண்டுகள் துறை சார்ந்த பணி அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
ப்ராஜெக்ட் என்ஜினீயர் (எலக்ட்ரானிக்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/எலக்ட்ரிக்கல்): இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இருக்கும் நபர்கள் எலக்ட்ரானிக்ஸ்,எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன்,எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்ஸ்ட்ரூமென்டேசன்,எலக்ட்ரானிக்ஸ் டிசைன் மற்றும் டெக்னாலஜி,அப்ளைட் எலக்ட்ரானிக்ஸ்,எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன்,எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கண்ட்ரோல் என்ஜினீயரிங், எலக்டரிக்கல்,எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரரிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேசன் அன்ட் கன்ட்ரோல் என்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும்.அதனோடு ஒரு வருடம் துறை சார்ந்த பணி அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்
வயது வரம்பு: ப்ராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் அதிகபட்ச வயது 28 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அரசு விதிகளின் படி எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 5 வயது, ஓபிசி பிரிவினருக்கு 3 வயது,மாற்றுத்திறனாளிகள் 5 முதல் 10 வயது வரை என வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
முதல் வருடம் – ரூ.30 ஆயிரம்
இரண்டாவது வருடம் – ரூ.33 ஆயிரம்
மூன்றாவது வருடம் – ரூ.36 ஆயிரம்
நான்காவது வருடம் – ரூ.39 ஆயிரம்
விண்ணப்பிக்கும் முறை: நேரடி முறை
ப்ராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் www.bdl-india.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.அவற்றை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடத்தப்படும் நேர்காணலுக்கு சென்று பங்கு பெற வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் நாள்:
ப்ராஜெக்ட் என்ஜினீயர் (மெக்கானிக்கல்) பணிக்கு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி காலை 8.30 மணிக்கும்,ப்ராஜெக்ட் என்ஜினீயர் (எலக்ட்ரானிக்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/எலக்ட்ரிக்கல்) பணிக்கு செப்டம்பர் மாதம் மாதம் 17 ம் தேதி காலை 8.30 மணிக்கும் நடைபெற இருக்கின்றது.
முகவரி:
Aeronautical Society of India, Surajan Das Road, Opposite Engine Division, Bina Mangala, New Tippasandra, Bengaluru, Karnataka – 560 075 (Land Mark: Near Vivekananda Metro Station).