இந்தியா பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்!!! இந்த போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிப்பு!!!

0
40
#image_title

இந்தியா பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்!!! இந்த போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிப்பு!!!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நாளைய(செப்டம்பர்10) போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிகின்றது. இந்நிலையில் இந்த போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு ஆசியக்கோப்பை ஒருநாள் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆப்கானிஸ்தான், நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய ஆறு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து லீக் சுற்றுகளில் விளையாடியது. லீக் சுற்றுகளின் முடிவில் இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.

அதன்படி இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர்.போர் சுற்றுக்கு முன்னேறியது. நேபாளம், இலங்கை இரண்டு அணிகளும் தொடரை விட்டு வெளியேறியது.

அதன்படி சூப்பர் போர்.முதல் சுற்றில் பாகிஸ்தான்.மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தான்.அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் சூப்பர் போர் சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை(செப்டம்பர்10) மோதுகின்றது.

மிகுந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டி கொழும்புவில் நடைபெறுகின்றது. இந்நிலையில் இந்த போட்டிக்கு மட்டும் ஒரு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்தியா பாகிஸ்தான்.மோதும் போட்டிக்கு ரிசர்வ் டே வசதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது நாளை(செப்டம்பர்10) நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் மழை குறுக்கிட்டால் போட்டி நாளை மறுநாள் மாற்றி வைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக் கோப்பை தொடரில் இரண்டாவது முறையாக மோதுவதால் இந்த ரிசர்வ் டே வசதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று(செப்டம்பர்9) நடைபெறும் ஆசியக் கோப்பை தொடரின் இரண்டாவது சுற்றில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றது. இந்த போட்டி இன்று(செப்டம்பர்9) கொழும்புவில் நடைபெறுகின்றது.