10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தபால் துறையில் வேலை! நேர்காணல் மட்டும்!

Photo of author

By Divya

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தபால் துறையில் வேலை! நேர்காணல் மட்டும்!

சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் காலியாக முகவர் பணியிடத்தை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதியானவர்கள் என்று சொல்லப்பட்டு இருக்கின்றது.

வேலை: மத்திய அரசு பணி

நிறுவனம்: இந்திய தபால் துறை

பணி:

*முகவர்(ஆயுள் காப்பீடு விற்பனை முகவர்)

பணியிடம்: சென்னை

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 50 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சம்பள விவரம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: நேரடி முறை

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் நபர்கள் ஜனவரி 20 அன்று நடைபெற இருக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

நேர்காணலுக்கு செல்லும் பொழுது தேவையான அனைத்து ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

கூடுதல் விவரங்கள் அறிய: https://www.indiapost.gov.in/Financial/Pages/Content/pli.aspx?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்ற இணைய தள பக்கத்தை அணுகவும்.

நேர்காணல் நடைபெறும் நாள்: ஜனவரி 20