12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சமூக நலத்துறையில் வேலை!! எழுத்து தேர்வு கிடையாது.. உடனே விண்ணப்பிக்க!!

0
5

திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கக்கூடிய குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் கீழ் இயங்கி வரக்கூடிய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக இருக்கக்கூடிய உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

காலியாக உள்ள பணியிடத்தின் விவரங்கள் :-

 

காலி பணியிடம் – 1

 

கல்வி தகுதி – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது கணினியில் டிப்ளமோ சான்றிதழ் படிப்பு. பணி அனுபவம் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை

 

வயது வரம்பு – 42 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

 

சம்பளம் – ரூ.13,240

 

தேர்வு முறை – நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்கும் முறை – https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2025/04/2025042397.pdf என்ற இணையதள பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு மே மாதம் 6 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி மே 6 ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முகவரி :-

 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்,

கொக்கிரகுளம்,

திருநெல்வேலி – 9

Previous articleதீவிரவாதிகள் சுடுவது தெரியாமல் ஜிப்லைனில் செல்லும் சுற்றுலா பயணி!.. அதிர்ச்சி வீடியோ!..
Next articleபத்ம பூஷன் விருது வாங்கிய அஜித்!. விஜய், பவன் கல்யாண் வாழ்த்து!…