இளம் வயதில் மூட்டு வலி? கருப்பு உளுந்தை இப்படி சாப்பிட்டு வந்தால் 7 நாட்களில் மூட்டுகள் வலுப்பெறும்!!

0
186

இன்றைய வாழ்க்கை சூழலில் முதுமை காலத்தில் சந்திக்க கூடிய பல உடல் நலப் பிரச்சனைகளை இளம் வயதினர் சந்தித்து வருகின்றனர்.முந்தைய காலம் போல் அல்லாமல் தற்போதைய கால வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளது.இதனால் வயது மகிழ்ச்சியாக வாழ வேண்டிய காலத்தில் நோய்வாய்ப்பட நேரிடுகிறது.

குறிப்பாக மூட்டுவலி பாதிப்பை வயது பேதமின்றி அனைவரும் சந்தித்து வருகின்றனர்.இந்த மூட்டுவலி குணமாக உளுந்து பருப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.தற்பொழுது கருப்பு உளுந்து கலி மற்றும் கருப்பு உளுந்து துவையல் செய்வது குறித்து விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)உளுந்து பருப்பு – அரை கப்
2)நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒன்றரை கப்

தயாரிக்கும் முறை:-

முதலில் அரை கப் கருப்பு உளுந்தை உடைத்து வாணலியில் போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும்.

பிறகு இதை ஆறவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் கனமான பாத்திரம் வைத்து ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதன் பிறகு அரைத்து வைத்துள்ள வெள்ளை உளுந்து பொடியை அதில் கொட்டி கட்டி பிடிக்காமல் கிளற வேண்டும்.ராகி கலி செய்வது போல் உளுந்து கலியை கிண்ட வேண்டும்.

உளுந்து கலி வெந்து வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு தட்டில் உருண்டையாக உருட்டி வைக்க வேண்டும்.

பிறகு உளுந்து கலியில் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி,முழங்கால் வலி போன்ற பாதிப்புகள் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு உளுந்து – மூன்று தேக்கரண்டி
2)பெருங்காயத் தூள் – கால் தேக்கரண்டி
3)வர மிளகாய் – ஒன்று
4)பூண்டு பல் – இரண்டு
5)உப்பு – தேவையான அளவு
6)நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
7)கடுகு – அரை தேக்கரண்டி
8)கடலை பருப்பு – ஒரு தேக்கரண்டி
9)கறிவேப்பிலை – ஒரு கொத்து
10)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் வாணலி வைத்து மூன்று தேக்கரண்டி கருப்பு உளுந்து மற்றும் கடலை பருப்பு போட்டு வறுக்க வேண்டும்.

பிறகு இதை தட்டில் கொட்டி ஆறவிட வேண்டும்.அதன் பிறகு வரமிளகாய்,கொத்தமல்லி விதை,பூண்டு பற்களை போட்டு வறுக்க வேண்டும்.

பிறகு வறுத்த பொருட்களை ஆறவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு முதலில் கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.

பிறகு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் வாணலி வைத்து நல்லெண்ணய் ஊற்றி சூடானதும் கடுகு கறிவேப்பிலை போட்டு பொரியவிட வேண்டும்.

பின்னர் அரைத்த விழுதை போட்டு சிறிது நேரம் கிளற வேண்டும்.அதன் பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கலந்துவிட்டு அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த உளுந்து துவையலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு சம்மந்தபட்ட பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.

Previous articleஉயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க.. இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் குடிங்க!!
Next articleஅடிக்கடி தலைவலி வந்து போகுதா? இதற்கு நிவாரணம் தரும் வீட்டுமுறை தைலம் இதோ!!