மூட்டு வலி? ஒரு கப் தேங்காய் பாலில் இந்த தூளை கலந்து குடிங்க!! ஒரே நாளில் மூட்டு வலிமையாகும்!!

Photo of author

By Divya

இன்று மூட்டு வலி ஒரு பொதுவான பாதிப்பாக மாறிவிட்டது.முன்பெல்லாம் முதியவர்கள் மட்டும் இந்நோய் பாதிப்பை சந்தித்து வந்ததால் இதை முதுமை நோய் என்று சொல்லப்பட்டது.ஆனால் தற்பொழுது இளம் வயதினர்,பள்ளி செல்லும் பருவ குழந்தைகள் வரை அனைவரும் மூட்டு வலி பாதிப்பை சந்திக்கின்றனர்.

மூட்டு வலி உண்டாக காரணங்கள்:-

*வயது முதுமை
*எலும்பு மற்றும் ஜவ்வு தேய்மானம்
*உடல் பருமன்
*மூட்டு பகுதியில் காயம் ஏற்படுதல்
*கால்சியம் பற்றாக்குறை
*தசை பலவீனம்

மருந்து மாத்திரை இன்றி மூட்டு வலியை குணப்படுத்திக் கொள்ள வழிகள்:

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் துருவல் – ஒரு கப்
2)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
3)பனங்கற்கண்டு – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

1.ஒரு தேங்காயை உடைத்து துருவல் கொண்டு துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.

2.தேங்காய் நன்றாக அரைக்கபட்டு பாலாக வந்த பிறகு ஒரு பாத்திரத்திற்கு இதை பிழிந்துவிட வேண்டும்.பிறகு தேங்காய் கசடை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மீண்டும் ஒருமுறை அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

3.அதன் பிறகு பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அரைத்த தேங்காய் பாலை அதில் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும்.

4.பால் கொதிக்கும் சமயத்தில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கலந்துவிட வேண்டும்.தேங்காய் பால் மற்றும் மஞ்சள் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

5.பிறகு இந்த பாலை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி அளவு பனங்கற்கண்டு தூள் சேர்த்து பருகி வந்தால் முழங்கால் வலி,மூட்டு வலி,ஜவ்வு தேய்மானம்,எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பிரச்சனைகள் அகலும்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி – ஒரு துண்டு
2)பூண்டு – இரண்டு பல்
3)முருங்கை கீரை – கால் கப்
4)பிரண்டை தண்டு மற்றும் கீரை – கால் கப்
5)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு

செய்முறை விளக்கம்:-

1.ஒரு பீஸ் இஞ்சியை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இரண்டு பல் பூண்டை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்துக் கொள்ளுங்கள்.

2.அதன் பிறகு கால் கப் முருங்கை இலை மற்றும் பிரண்டை இலை,தண்டை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

3.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு முருங்கை கீரை,பிரண்டை தண்டு மற்றும் பிரண்டை இலையை போட்டு கொதிக்க வையுங்கள்.

4.அடுத்து இடித்து வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு பற்களை அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.பிறகு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.

5.இந்த பானத்தை ஆறவைத்து பருகி வந்தால் மூட்டு எலும்பின் வலிமை அதிகரிக்கும்.எலும்பு தேய்மானம்,ஜவ்வு தேய்மானம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.