இன்று அதிகரித்து வரும் நோய் பாதிப்புகளில் மூட்டு வலி,மூட்டு வீக்கம்.வயதானவர்கள் மட்டுமின்றி சிறியவர்களுக்கும் இந்த பாதிப்பு சகஜமாக ஏற்படுகிறது.இன்று பெரும்பாலானோர் ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்.இதனால் எலும்புகள் பலவீனமடைந்து மூட்டு வலி மூட்டு தேய்மானம் முதுகு வலி போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.
ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் உடல் பருமன்,கால்சியம் சத்து குறைபாடு போன்ற காரணங்களால் மூட்டுப்பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டு நடப்பதில் சிரமம் உண்டாகிறது.இந்த பாதிப்பை இயற்கையான வழியில் குணப்படுத்திக் கொள்ள முடியும்.
1)பசும் பால்
2)மஞ்சள் தூள்
100 அல்லது 150 மில்லி பசும் பாலை பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும்.பிறகு அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் மூட்டு வலி,மூட்டு தேய்மானம்,மூட்டு வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் சரியாகும்.
1)கடுகு எண்ணெய்
2)பூண்டு
25 மில்லி கடுகு எண்ணெயை ஒரு கடாயில் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு பல் பூண்டை நறுக்கி போட்டு சிறிது நேரம் சூடாக்கி அடுப்பை அணைக்கவும்.இந்த எண்ணெயை மூட்டு பகுதியில் அப்ளை செய்து வந்தால் மூட்டு வலி வீக்கம் மற்றும் மூட்டு தேய்மான பிரச்சனை நீங்கும்.
1)இஞ்சி
ஒரு துண்டு இஞ்சியை எடுத்து தோல் நீக்கிவிட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.இதை மூட்டு பகுதியில் அப்ளை செய்வதால் வலி,வீக்கம் குறையும்.
1)ஆலிவ் ஆயில்
2)எலுமிச்சை சாறு
ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து மூட்டு பகுதியில் அப்ளை செய்து வந்தால் வலி,வீக்கம் சரியாகும்.